search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிலிண்டர் விலை"

    • பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
    • 167-வது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை.

    எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் சர்வசே சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, குறைவுக்கு ஏற்ப பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர் விலைகளை மாறியமைக்கும்.

    அந்த வகையில் செப்டம்பர் 1-ந்தேதியான இன்று வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை மட்டும் உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையிலும் மாற்றம் செய்யப்படவில்லை. 14 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.818.50ஆக நீடிக்கிறது.

    ஆனால், 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.38 உயர்ந்து ரூ.1,855-க்கு விற்கப்படுகிறது. கடந்த மாதம் ரூ.7.50 உயர்ந்த நிலையில் தற்போது ரூ.38 உயர்ந்துள்ளதால் வணிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    சென்னையில் தொடர்ந்து 167-வது நாளாக இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ100.75-க்கும், டீசல் 92.34 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    • மாதத்திற்கு இரண்டு முறை எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விலையை தீர்மானிக்கும்.
    • தற்போது வணிக சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களே சிலிண்டர் விலையை தீர்மானித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்துவிட்டது.

    இதனையடுத்து மாதத்திற்கு இரண்டு முறை இந்நிறுவனங்கள் சிலிண்டர் விலையை தீர்மானிக்கும். அந்த வகையில் தற்போது வணிக சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

    நாடு முழுவதும் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்களின் விலை ரூ.70.50 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் சென்னையில் நேற்று வரை 1,911 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை இன்று முதல் ரூ.1,840.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    கடந்த மாதமும் வணிக சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • மகளிர் தினத்தை முன்னிட்டு சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை மத்திய அரசு திடீரென குறைத்தது.
    • பெண்களுக்கு சிலிண்டர் பற்றி மட்டும்தான் கவலையா? என அவர் கேள்வி எழுப்பினார்.

    தூத்துக்குடி:

    சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு மகளிர் தின பரிசாக வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை மத்திய அரசு திடீரென குறைத்துள்ளது. மகளிர் தினத்தையொட்டி வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை ரூ. 100 குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்துள்ளார்.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தல் வருவதாலேயே மத்திய அரசு சிலிண்டர் விலையை குறைத்துள்ளது என தி.மு.க. எம்.பி. கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.

    இதுதொடர்பாக, தி.மு.க. எம்.பி. கனிமொழி செய்தியாளர்களிடம் கூறுகையில், சிலிண்டர் விலையை எப்பொழுதோ குறைத்திருக்க முடியும். தேர்தல் வரும் சமயத்தில் தான் சிலிண்டர் விலையைக் குறைத்துள்ளனர். அதுவும் மகளிர் தினத்தில் சிலிண்டர் விலையை குறைத்திருக்கிறார்கள். பெண்களுக்கு சிலிண்டர் பற்றி மட்டும்தான் கவலையா? பெண்கள் சமையல் அறையிலேயே இருக்க வேண்டும் என்பது போன்ற விஷயமாக இதை மாற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்தார்.

    • ஒவ்வொரு இந்தியனின் வங்கிக் கணக்கில் 15 லட்சம் ரூபாய் போடுவேன் என்றார். போட்டுள்ளனரா?
    • அவர் பதவிக்கு வருவதற்கு முன்னதாக பெட்ரோல் ரூ.50. டீசல் ரூ.40 எனக் கூறினார். குறைத்துள்ளனரா?.

    மகளிர் தினத்தை முன்னிட்டு சமையல் சிலிண்டர் விலை ரூ.100 குறைக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். இதனையொட்டி நள்ளிரவு முதல் பிரதமர் மோடி அறிவித்ததன்படி சிலிண்டர் விலை ரூ. 100 குறைக்கப்பட்டுள்ளது.

    தேர்தல் வரவிருக்கும் நிலையில் சிலிண்டர் விலை ரூ.100 குறைக்கப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.

    இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மத்திய முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் குறைப்பார்கள். அவர் பதவிக்கு வருவதற்கு முன்னதாக பெட்ரோல் ரூ.50. டீசல் ரூ.40 எனக் கூறினார். குறைத்துள்ளனரா?.

    ஒவ்வொரு இந்தியனின் வங்கிக் கணக்கில் 15 லட்சம் ரூபாய் போடுவேன் என்றார். போட்டுள்ளனரா?

    தேர்தலுக்காக 100 ரூபாய் குறைப்பார்கள். தேர்தல் முடிந்த பிறகு கூட்டமாட்டோம் எனச் சொல்லட்டும். தேர்தலுக்காக குறைக்கிறேன் என்றால்... வேண்டாம் என்று சொல்லல.. மக்களுக்கு பயன்.

     தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தால் கூட்டமாட்டேன் என்று பிரதமர் மோடி சொலலட்டும்.

    இவ்வாறு ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

    ஐந்து மாநில தேர்தலையொட்டி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிலிண்டர் விலை 200 ரூபாய் குறைக்கப்பட்டது. தற்போது 2-வது முறையாக 100 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

    • 657-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படாமல் அதே விலையே நீடிக்கிறது.
    • பெண்களின் முன்னேற்றத்தை உறுதிபடுத்துதல் மற்றும் அவர்கள் எளிமையாக வாழ்வதை உறுதிபடுத்துவதற்கான எங்களின் உறுதிமொழியாகும்.

    புதுடெல்லி:

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோலிய பொருட்களின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தால் இந்தியாவிலும் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் உள்ளிட்ட பெட்ரோலிய பொருட்களின் விலை அதிகரிக்கும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தால் பெட்ரோலிய பொருட்களின் விலையும் குறையும்.

    கடந்த 6 மாதங்களாகவே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் மிகப்பெரிய அளவில் உயர்வு ஏற்படவில்லை. மாறாக கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. எனவே இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் இன்று 657-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படாமல் அதே விலையே நீடிக்கிறது. அதாவது சென்னையில் தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63-க்கும், டீசல் விலை லிட்டர் ரூ.94.24-க்கும் விற்கப்படுகிறது. இதன் மூலம் எண்ணெய் நிறுவனங்களுக்கு பல ஆயிரம் கோடி வருமானம் கிடைக்கிறது. எனவே எப்போது வேண்டுமானாலும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் சர்வதேச மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி பெண்களுக்கு மகளிர் தின பரிசாக, வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை மத்திய அரசு குறைத்துள்ளது. மகளிர் தினத்தையொட்டி வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை ரூ. 100 குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் பிரதமர் மோடி கூறி இருப்பதாவது:-

    மகளிர் தினமான இன்று நமது அரசு வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலையை 100 ரூபாய் குறைக்க முடிவு செய்துள்ளது. இந்த முடிவு நாடு முழுவதும் உள்ள மக்களின் குடும்ப நிதிச்சுமையை பெருமளவு குறைக்கும். குறிப்பாக, பெண்சக்தி திட்டத்தின்கீழ் நல்ல பலன் கிடைக்கும்.

    சமையல் கியாசை மலிவு விலைக்கு கொண்டு வருவதன் மூலம் குடும்பங்கள் நலமுடன் இருக்கவேண்டும், அவர்களின் குடும்ப சூழ்நிலை வளமாக அமைய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். இது பெண்களின் முன்னேற்றத்தை உறுதிபடுத்துதல் மற்றும் அவர்கள் எளிமையாக வாழ்வதை உறுதிபடுத்துவதற்கான எங்களின் உறுதிமொழியாகும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர் ஏற்கெனவே ரூ.918.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது 100 ரூபாய் குறைக்கப்பட்டு இருப்பதன் மூலம் இனி சமையல் கியாஸ் ரூ.818.50-க்கு கிடைக்கும்.

    பிரதமரின் உஜ்வாலா யோஜனா திட்டத்தில் சமையல் கியாஸ் சிலிண்டர் பெறும் பயனாளிகளுக்கு வழங்கப்படும் ரூ.300 மானியத்தை ஓராண்டுக்கு நீட்டிக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய மந்திரிசபை கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய மந்திரி பியூஷ் கோயல் நேற்று தெரிவித்திருந்தார்.

    சமையல் கியாஸ் திட்ட மானியத்துக்கு மத்திய மந்திரிசபை ரூ.12 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து உள்ளது. இதன் மூலம் பிரதமர் உஜ்வாலா யோஜனா திட்ட பயனாளிகளுக்கு ரூ.603-க்கு மானியத்துடன் சிலிண்டர் கிடைக்கும். மகளிர் தினத்தையொட்டி இந்த சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்து இருந்தார்.

    அதன் தொடர்ச்சியாக இன்று மற்ற சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை ரூ.100 குறைத்து பிரதமர் மோடி இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாதத்திற்கு இரண்டு முறை நிறுவனங்கள் சிலிண்டர் விலையை தீர்மானிக்கும்.
    • நேற்று வரை வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் 1,937 ரூபாய்க்கு விற்பனையாகி வந்த நிலையில் இன்று முதல் ரூ.1,960.50 பைசாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு எண்ணெய் நிறுவனங்களே சிலிண்டர் விலையை தீர்மானித்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துவிட்டது. இதனையடுத்து மாதத்திற்கு இரண்டு முறை இந்நிறுவனங்கள் சிலிண்டர் விலையை தீர்மானிக்கும்.

    அந்த வகையில் தற்போது வணிக சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 23 ரூபாய் 50 பைசா உயர்ந்து 1,960 ரூபாய் 50 பைசாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

    இதன் மூலம் சென்னையில் நேற்று வரை வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் 1,937 ரூபாய்க்கு விற்பனையாகி வந்த நிலையில் இன்று முதல் ரூ.1,960.50 பைசாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    • வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 39 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
    • சென்னையில் தற்போது 1929.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    கச்சா எண்ணெய் விலை, சர்வதேச சந்தையில் இந்தியா பண மதிப்பு உள்ளிட்ட அம்சங்களை கொண்டு பெட்ரோல், டீசல், கியாஸ் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றனர்.

    அந்த வகையில் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலைகள் மாற்றி அமைக்கப்படும். கியாஸ் சிலிண்டர் விலைகள் மாதத்திற்கு ஒருமுறை அல்லது தேவைக்கேற்க மாற்றி அமைக்கப்படும்.

    அந்த வகையில் இன்று சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சென்னையில் 39 ரூபாய் குறைந்து 1929.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் மாற்றம் செய்யப்படவில்லை. அது தொடர்ந்து 580-வது நாளாக இன்றும் நீடிக்கிறது.

    சிலிண்டர், பெட்ரோல் மற்றும் டீசல் விலை டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு ஏற்ப மாறுதல் இருக்கும்.

    • நவம்பர் 1-ந்தேதி 100 ரூபாய் உயர்த்தப்பட்டது.
    • தற்போது 57 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

    எண்ணெய் நிறுவனங்கள் கச்சா எண்ணெய் விலை உயர்வு, சர்வதேச சந்தை மதிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலையை மாதந்தோறும் 1-ந்தேதி மாற்றியமைக்கும். அந்த வகையில் நவம்பர் 1-ந்தேதி விலை மாற்றியமைக்கப்பட்டு, சிலிண்டர் ஒன்றுக்கு ரூ. 101.50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் 1999.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

    இந்த நிலையில் இன்று சிலிண்டருக்கு 57 ரூபாய் குறைந்து 1942 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    அதேவேளையில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை. வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலையும் உயர்த்தப்படவில்லை. 918.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை உயர்வு டெல்லி, மும்பை, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு ஏற்பட மாறுபடும்.

    • கடந்த மாதம் 203 ரூபாய் உயர்த்தப்பட்டது
    • வீட்டு உபயோக சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்படவில்லை

    எண்ணெய் நிறுவனங்கள் கச்சா எண்ணெய் விலை உயர்வு, சர்வதேச சந்தை ஆகியவற்றை கருத்தில் கொண்டு பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலையை மாதந்தோறும் 1-ந்தேதி மாற்றியமைக்கும். அந்த வகையில் நவம்பர் 1-ந்தேதியான இன்று விலை மாற்றியமைக்கப்பட்டது.

    அதன்படி சென்னையில் வணிக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் ஒன்றுக்கு ரூ. 101.50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் 203 ரூபாய் உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது 101.50 ரூபாய் உயர்த்தப்பட்டு, 1999.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    அதேவேளையில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை. வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலையும் உயர்த்தப்படவில்லை. 918.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை உயர்வு டெல்லி, மும்பை, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு ஏற்பட மாறுபடும்.

    • சென்னையில் 92.50 ரூபாய் விலை குறைந்துள்ளது
    • டெல்லியில் 99.75 ரூபாய் குறைக்கப்பட்டு 1680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது

    சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை 92.50 ரூபாய் குறைந்துள்ளது. தற்போது 1,852 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் மாற்றமில்லை. 1118.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    டெல்லியில் 99.75 ரூபாய் குறைக்கப்பட்டு வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் 1,680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    • டீக்கடை, ஓட்டல், பேக்கரி உள்ளிட்ட பல்வேறு வணிக பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தப்படும் 19 கிலோ சிலிண்டர் விலை 2 மாதமாக குறைந்து வந்த நிலையில் இன்று சற்று அதிகரித்துள்ளது.
    • வர்த்தக பயன்பாட்டு சிலிண்டர் பெரும்பாலும் ஓட்டல், டீக்கடைகளில் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன.

    சென்னை:

    பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலையை மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் நிர்ணயித்து வருகின்றன. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப விலை மாற்றம் செய்யப்படுகிறது.

    கடந்த 3 மாதமாக சமையல் கியாஸ் விலையில் மாற்றம் இல்லை. தொடர்ந்து ஒரே விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 14 கிலோ சமையல் சிலிண்டர் விலை ரூ.1118.50-க்கு விற்கப்படுகிறது. ஏழை, நடுத்தர மக்கள் அதிகம் பயன்படுத்துகின்ற சமையல் சிலிண்டருக்கு ரூ.1200 வரை செலவிட வேண்டிய நிலை உள்ளது.

    கடந்த மாதங்களில் பிற மாநிலங்களில் நடந்த தேர்தல் மற்றும் விரைவில் நடைபெற உள்ள 5 மாநில தேர்தல் காரணமாக வீட்டு உபயோக சிலிண்டர் விலை ஒரே அளவில் உள்ளது.

    ஆனால் டீக்கடை, ஓட்டல், பேக்கரி உள்ளிட்ட பல்வேறு வணிக பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தப்படும் 19 கிலோ சிலிண்டர் விலை 2 மாதமாக குறைந்து வந்த நிலையில் இன்று சற்று அதிகரித்துள்ளது.

    கடந்த மாதம் ரூ.1937-க்கு விற்கப்பட்ட சிலிண்டர் விலை 8 ரூபாய் உயர்த்தப்பட்டு ரூ.1945 நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. வர்த்தக பயன்பாட்டு சிலிண்டர் பெரும்பாலும் ஓட்டல், டீக்கடைகளில் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன.

    சிறு, சிறு தொழில் செய்வோர், சாலையோரம் கடை நடத்துபவர்கள் வணிக சிலிண்டர் விலை மேலும் குறையும் என்று எதிர்பார்த்த நிலையில் சற்று உயர்ந்து இருப்பது பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதாக தொழில் செய்வோர் கருதுகிறார்கள்.

    • 14 கிலோ சிலிண்டர் தொலைந்து போனால் ரூ.2,650 அபராதம் விதிக்கப்படும்.
    • 5 கிலோ சிலிண்டர் தொலைந்து போனால் ரூ.1,400 வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    14 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் டெபாசிட் தொகை ரூ.2,200 ஆக உயர்ந்துள்ளது.5 கிலோ எடை கொண்ட சிலிண்டருக்கான டெபாசிட் தொகை ரூ.1,150 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    இரண்டு சிலிண்டர்களுக்கான இணைப்பை பெற ரூ.4,400 செலுத்த வேண்டும். இதேபோல், எரிவாயு சிலிண்டரன் ரெகுலேட்டர் விலையும் ரூ.550 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

    மேலும், 14 கிலோ சிலிண்டர் தொலைந்து போனால் ரூ.2,650 அபராதம் விதிக்கப்படும். 5 கிலோ சிலிண்டர் தொலைந்து போனால் ரூ.1,400 வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    சிலிண்டரின் டெபாசிட் தொகை அதிகரிப்பால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    ×